சினிமா

`சிலர் ஊசியில் ஒட்டகம் நுழைக்கப் பார்க்கிறார்கள்’- ஜிப்மரில் இந்தி திணிப்பை எதிர்க்கும் வைரமுத்து

காமதேனு

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அலுவல் பணிகளுக்கு இந்தியை பயன்படுத்த உத்தரவிடப்பட்டதற்கு கவிஞர் வைரமுத்து எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் மத்திய அரசின் கட்டுப்பட்டில் இருக்கும் ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மருத்துமனை இயங்கி வருகிறது. இங்கு அலுவல் பயன்பாட்டுக்கு ஆங்கிலம், இந்தி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே அலுவல் பணிகளுக்கு முடிந்த வரை இந்தியை மட்டுமே பயன்படுத்த ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவுக்கு திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்துவும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது:

கடைசியில் இந்தி

ஜிப்மர் மருத்துவமனையில்

அனுமதிக்கப்பட்டிருக்கிறது;

வருந்துகிறோம்

இந்தி படிப்போரை

வெறுக்கமாட்டோம்;

திணிப்போரை

ரசிக்கமாட்டோம்

ஒருமைப்பாடு

சிறுமைப்படாதிருக்க

நாட்டின் பன்மைக்கலாசாரம்

பாதுகாக்கப்படவேண்டும்

சிலர்

நுழைக்கப்பார்ப்பது

ஊசியில் நூலன்று;

ஒட்டகம்

நுழையாது

-இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT