சினிமா

'கட்டா குஸ்தி' வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்

காமதேனு

நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள 'கட்டா குஸ்தி' படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வாங்கி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஷ்ணு விஷால் நடித்துள்ள படம் 'கட்டா குஸ்தி'. இந்த படத்தை செல்ல அய்யாவு இயக்கி உள்ளார். இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். இப்படத்தை விஷ்ணு விஷாலும், தெலுங்கு நடிகர் ரவி தேஜாவும் இணைந்து தயாரித்து உள்ளனர்.

இப்படம் டிச. 2-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வாங்கி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படம் 'மட்டி குஸ்தி' என்கிற பெயரில் தெலுங்கிலும் வெளியாக உள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ' எஃப்ஐஆர்' படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT