த்ரிஷா 
சினிமா

த்ரிஷாவுக்கு சினிமா வயசு 21!

காமதேனு

‘மௌனம் பேசியதே’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான த்ரிஷா சினிமாவில் தனது 21 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். த்ரிஷாவின் இந்த வெற்றிப் பயணத்தை அவருடை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கொண்டாடி தீர்த்து வருகிறார்கள்.

‘சாமி’, ‘கில்லி’ திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ்பெற்ற த்ரிஷா, திரைத்துறைக்கு வருவதற்கு முன் மிஸ் சென்னையாக 1999-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். ‘ஜோடி’ படத்தில் துணை கதாப்பாத்திரத்தில் தோன்றினார். ‘96 ’ திரைப்படத்தில் அவர் நடித்த ஜானு கதாபாத்திரம் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்டது. ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் த்ரிஷா குந்தவை கேரக்டரில் வாழ்ந்து காட்டினார்.

’96’ படத்தில்

சமீபத்தில் நடிகர் மன்சூர் அலிகான் தன்னை தவறாகப் பேசியதாக முறைத்துக்கொண்டார் த்ரிஷா. அதற்காக அவருக்கு ஆதரவு அலைகளும் எழுந்தன. பின்னர், தான் பேசியதற்காக த்ரிஷாவிடம் மன்சூர் அலிகான் வருத்தம் தெரிவித்தார்.

த்ரிஷா தான் நடிக்கும் படங்களில் தனது கதாபாத்திரங்கள் பேசப்படும் பாத்திரங்களாக பார்த்துக்கொள்வார். அதற்காக அவரது படங்களுக்கு என்று தனியான ரசிகர் பட்டாளம் உண்டு.

பொன்னியின் செல்வனில்...

மே 4-ம் தேதி பிறந்த த்ரிஷாவுக்கு தற்போது அகவை 40 ஆகிறது என்றால் திரையுலகம் மட்டுமல்ல ரசிகர்களும் அத்தனை எளிதாக நம்பத்தான் மாட்டார்கள். அந்தளவுக்கு தன்னை எப்போதும் இளமையாக வைத்துக்கொள்வதில் த்ரிஷாவுக்கு நிகர் அவர்தான்.

இதையும் வாசிக்கலாமே...

HBD Rajinikanth| பெயர் தந்த ஏ.வி.எம்.ராஜன்... குற்றவுணர்ச்சிக்குத் தள்ளிய அந்த சம்பவம்!

ராமஜெயம் கொலை வழக்கில் திடீர் பரபரப்பு...விசாரணைக்குச் சென்றவர் வெட்டிக்கொலை!

அதிரடி... விதிகளை மீறியதாக 350 மருத்துவக் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

அதிகாலையில் பெரும் சோகம்... ஏரி உடைந்து ஊருக்குள் பாய்ந்த தண்ணீர்... அலறியடித்து ஓடிய மக்கள்!

2023-ம் ஆண்டில் இந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது... இவைதான்!

SCROLL FOR NEXT