சினிமா

ஆந்திராவில் திரையரங்குகளில் டிக்கெட் விலை அதிகரிப்பு

காமதேனு

ஆந்திர திரையரங்குகளில் டிக்கெட் விலையை அதிகரித்து மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ஆந்திராவில் திரையரங்குகளில் டிக்கெட் விலையை குறைத்து மாநில முதல்வர் ஜெகன் மோகன் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்த விலை குறைப்பு தெலுங்கு சினிமா வட்டாரத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும் திரையங்குகளில் சிறப்பு காட்சிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அதனை பல தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் கண்டித்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் ஆந்திர உயர்நீதிமன்றம், தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைத்து திரையரங்குகளில் கட்டண நிர்ணயம் செய்யுமாறு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதையடுத்து, திரையரங்குகளில் டிக்கெட் விலையை அதிகரிப்பதற்கான அறிக்கையை மாநில அரசிடம் குழு சமர்ப்பித்தது. இதையடுத்து, டிக்கெட் விலை உயர்வை அதிகரித்து மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளளது.

SCROLL FOR NEXT