துரிதம் 
சினிமா

‘துரிதம்’ படத்தில் உண்மைச் சம்பவம்

காமதேனு

தமிழ்நாட்டில், சுமார் 40 ஆயிரம் கிமீ தூரம் பயணித்து ’துரிதம்’ திரைப்படத்தை படக்குழுவினர் முடித்துள்ளனர்.

தமிழில் பல ரோட் மூவிகள் வந்திருந்தாலும் தமிழகத்தை மையப்படுத்தி வெளியானது குறைவு. அந்தக் குறையை போக்கும்விதமாக உருவாகியுள்ள படம் ‘துரிதம்’. நம்பகத்தன்மைக்காக கதை நிகழும் சம்பந்தப்பட்ட ஊர்களுக்கே பயணம்செய்து, மொத்தப் படப்பிடிப்பையும் நடத்தியுள்ளனர். இதற்காக, 65 நாட்கள், சுமார் 40 ஆயிரம் கிலோ மீட்டர்கள் பயணித்து சாலைகளில் மட்டுமே பெரும்பாலான காட்சிகளை படமாக்கியுள்ளனர்.

’துரிதம்’ படத்தில் ஜெகன், ஈடன்

எல்லோருக்குமே தாங்கள் செய்யும் விஷயங்கள் அவர்கள் கண்ணோட்டத்தில் சரி என்பது போலத்தான் தெரியும். ஆனால், அடுத்தவர்கள் பார்வையில் அது தவறாகத்தெரிய வாய்ப்புண்டு. இந்தக் கருத்தை மையப்படுத்தி உண்மையில் நடந்த சம்பவம் ஒன்றைத் தழுவி இந்தப் படத்தை இயக்கியுள்ளார் சீனிவாசன். இவர் இயக்குநர் ஹெச்.வினோத்தின் சீடர்.

‘சண்டியர்’ நாயகன் ஜெகன், இதில் நாயகனாக நடித்துள்ளார். அவரே தயாரித்தும் உள்ளார். கதாநாயகியாக மிஸ் சவுத் இந்தியா பட்டம் வென்ற ஈடன் நடித்துள்ளார். ஏ.வெங்கடேஷ், பாலசரவணன், பூ ராமு, ராமச்சந்திரன் (ராம்ஸ்) உட்பட பலர் நடித்துள்ளனர். நரேஷ் இசையமைத்துள்ளார். வாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

SCROLL FOR NEXT