இயக்குநர் பிரசாந்த் நீல்
இயக்குநர் பிரசாந்த் நீல் 
சினிமா

’கே.ஜி.எஃப் 3’ படத்தில் பிரபல பாலிவுட் ஹீரோ நடிக்கிறாரா?

காமதேனு

பிரசாந்த் நீல் இயக்கிய 'கே.ஜி.எஃப்: சாப்டர் 2’ படத்தில், யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ் உள்பட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழிகளில் வெளியான இந்தப் படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்தப் படத்தின் மூன்றாம் பாகம் வெளியாக இருப்பதாகவும் அதற்கான ஆரம்பக் கட்டப் பணிகள் தொடங்கி இருப்பதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன் அதன் தயாரிப்பாளர் கூறியிருந்தார். நடிகர் ராணா டக்குபதி, இதில் வில்லனாக நடிக்க இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாயின.

ஹிருத்திக் ரோஷன்

இதற்கிடையே ‘கே.ஜி.எஃப் 3’ படத்தை இப்போது தொடங்கவில்லை என்று அந்தப் படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார். இயக்குநர் பிரசாந்த் நீல், இப்போது ’சலார்’ படத்தை இயக்கி வருகிறார். பிரபாஸ், ஸ்ருதிஹாசன் நடிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங், நவம்பர் மாதம் நிறைவடையும் என்று தெரிகிறது. இதையடுத்து அவர் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார்.

இப்போது, ’கே.ஜி.எஃப்’ மூன்றாம் பாகத்தில் பிரபல இந்தி ஹீரோ ஹிருத்திக் ரோஷன் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் உண்மைத் தன்மை குறித்து படக்குழு உறுதிப்படுத்தவில்லை.

SCROLL FOR NEXT