நடிகை ஐஸ்வர்யா ராய்
நடிகை ஐஸ்வர்யா ராய் 
சினிமா

ரஜினி ஜோடியாக மீண்டும் ஐஸ்வர்யா ராய்?

காமதேனு

ரஜினிகாந்த் ஜோடியாக ஐஸ்வர்யா ராய் மீண்டும் நடிக்க இருப்பதாகச் செய்திகள் பரவி வருகின்றன.

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ’அண்ணாத்த’ திரைப்படம், கடந்த நவம்பர் மாதம் வெளியானது. சிவா இயக்கிய இந்தப் படத்தில், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசை அமைத்திருந்தார். சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. இது, ரஜினிகாந்தின் 168-வது படம்.

’அண்ணாத்த’

இதையடுத்து ரஜினியின் 169-வது படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இதை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார் என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். இந்தப் படம் ஏப்ரல் மாதம் தொடங்க இருப்பதாகவும் மே மாதம் படப்பிடிப்பு தொடங்குவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தப் படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஏற்கெனவே ஷங்கர் இயக்கிய ’எந்திரன்’ படத்தில், ரஜினி ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். மணிரத்னம் இயக்கும் ’பொன்னியின் செல்வன்’ படத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்து வருகிறார்.

SCROLL FOR NEXT