பொன்னியின் செல்வன் படத்தில்
பொன்னியின் செல்வன் படத்தில் 
சினிமா

விஜய், அஜித் படத்தை பின்னுக்கு தள்ளியது `பொன்னியின் செல்வன்'- டாப் 10 வசூல் பட்டியலை வெளியிட்டது நெல்லை திரையரங்கம்

என்.சுவாமிநாதன்

திருநெல்வேலியில் உள்ள பிரபல திரையரங்கமான ராம், முத்துராம் திரையரங்கம், தங்கள் திரையரங்கின் 2022-ம் ஆண்டில் வசூலை வாரிக் குவித்த டாப் 10 படங்களின் புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது. இதில் விஜய்யின் பீஸ்ட் படத்தை, அஜித்தின் `வலிமை' வசூலில் முந்தியுள்ளது. அதேபோல் விஜய், அஜித் இருவரது படங்களையும் `பொன்னியின் செல்வன்' முந்தியுள்ளது.

வலிமை

நெல்லை ராம் சினிமாஸ் வெளியிட்டுள்ள வசூல் அடிப்படையில் முதலிடத்தை மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரபு, பார்த்திபன், சரத்குமார் என நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்து மணிரத்னம் இயக்கிய `பொன்னியின் செல்வன்' முதலிடம் பிடித்துள்ளது.

அசத்திய விக்ரம்!

வசூலில் இரண்டாம் இடத்தை கமல்ஹாசன் நடித்து, லோகேஷ் கனகராஜ் இயக்கிய `விக்ரம்' பிடித்திருப்பதாக திரையரங்கம் அறிவித்துள்ளது. இப்படம் விஜய்யின் பீஸ்ட், அஜித்தின் வலிமை இரண்டின் வசூலையும் முந்தியுள்ளது. மூன்றாவது இடத்தை கே.ஜி.எப் 2-வது பாகமும், நான்காவது இடத்தை அஜித்தின் வலிமையும், 5-வது இடத்தை விஜய்யின் பீஸ்ட் திரைப்படமும் நெல்லையில் வசூல் ரீதியாகப் பெற்றுள்ளது.

6-வது இடத்தை தனுஷ் நடித்த `திருச்சிற்றம்பலம்' திரைப்படமும், 7-வது இடத்தை சிவகார்த்திகேயன் நடித்த 'டான்' திரைப்படமும் பெற்றுள்ளது. 8-வது இடத்தை `ஆர்.ஆர்.ஆர்' படம் பிடித்துள்ளது. 9- வது இடத்தை கார்த்தி நடித்த குடும்ப சென்டிமென்ட் படமான 'விருமன்' பிடித்துள்ளது. வசூல் ரீதியாக 10-வது இடத்தை இயக்குனர் பிரதீப் ரங்கராஜன் தானே இயக்கி நடித்த 'லவ் டுடே' திரைப்படம் பெற்றுள்ளது.

விஜய், அஜித் இருவரின் படங்களுமே இந்த பட்டியலின்படி நான்கு, ஐந்தாவது இடமே பிடித்திருப்பது அவர்களின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது!

SCROLL FOR NEXT