நடிகர் தனுஷ்- ஸ்மிருதி வெங்கட்
நடிகர் தனுஷ்- ஸ்மிருதி வெங்கட் 
சினிமா

‘மாறன்’ படத்தின் `அண்ணன தாலாட்டும்' பாடல் நாளை வெளியீடு

காமதேனு

நடிகர் தனுஷ் நடித்துள்ள ‘மாறன்’ படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியாக இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

துருவங்கள் பதினாறு, மாஃபியா படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் மாறன். இந்தப் படத்தில் தனுஷ் பத்திரிக்கையாளராக நடித்திருப்பதாக கூறப்படுகிறது. படத்தில் நாயகியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. அமீர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும், சமுத்திரகனி, ஸ்மிருதி வெங்கட், மாஸ்டர் மகேந்திரன், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

போஸ்டரில் தனுஷ் - ஸ்ம்ருதி வெங்கட்

மாறன் படத்திலிருந்து முதலாவதாக `பொல்லாத உலகம்' என்ற பாடல் வெளியானது. இந்தப் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் படத்தின் இரண்டாவது பாடல் `அண்ணன தாலாட்டும்' என்ற பாடல் நாளை வெளியாக இருப்பதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில் தனுஷ் மற்றும் ஸ்ம்ருதி வெங்கட் இருவரும் இடம் பெற்றுள்ளனர். ஸ்மிருதி வெங்கட் இந்தப் படத்தில் தனுஷின் தங்கையாக நடித்துள்ளார். மாறன் திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது. விரைவில் ரிலீஸ் தேதி வெளியாகும் என்று தெரிகிறது.

SCROLL FOR NEXT