நட்டி, செல்வராகவன்
நட்டி, செல்வராகவன் 
சினிமா

செல்வராகவன், நட்டி இணையும் `பகாசூரன்’

காமதேனு

செல்வராகவன், நட்டி இணைந்து நடிக்கும் படத்துக்கு ’பகாசூரன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் படங்களை இயக்கிய மோகன் ஜி, அடுத்து இயக்கும் படத்துக்கு ’பகாசூரன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை, ஜி.எம். பிலிம் கார்ப்பரேஷன் என்ற பட நிறுவனம் தயாரிக்கிறது.

பகாசூரன் படத் தொடக்க விழாவில்

இந்தப் படத்தில் இயக்குநர் செல்வராகவன் நாயகனாக நடிக்கிறார். நட்டி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் பற்றிய அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிட இருக்கிறது. இந்தப் படத்துக்கு சாம்.சி.எஸ் இசை அமைக்கிறார். இதன் தொடக்க விழா பூஜை, சேலம் அருகில் உள்ள முத்துமலை முருகன் கோயிலில் இன்று நடைபெற்றது. திங்கட்கிழமை முதல் இதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடக்க இருக்கிறது.

SCROLL FOR NEXT