சினிமா

`தளபதி 66’-க்காக ஹைதராபாத்தில் பிரம்மாண்ட செட்!

காமதேனு

விஜய் நடிக்கும் படத்துக்காக, ஹைதராபாத்தில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது.

’பீஸ்ட்’ படத்தை அடுத்து விஜய் நடிக்கும் 66-வது படத்தை வம்சி பைடிபள்ளி இயக்குகிறார். இவர் கார்த்தி, நாகார்ஜுனா நடிப்பில் உருவான, ’தோழா’ படத்தை இயக்கியவர். தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். இதில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தமன் இசை அமைக்கிறார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்கிறார்.

ராஷ்மிகா, விஜய்

இந்தப் படத்தின் முதல் ஷெட்யூல் சென்னையில் நடந்தது. சில நாட்கள் இங்கு படப்பிடிப்பு நடந்தது. ஃபேமிலி சென்டிமென்ட்டை மையமாக கொண்டு இந்தக் கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில், சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவர் விஜய்க்குத் தந்தையாக நடிக்கிறார் என்று தெரிகிறது. நடிகர் ஷாம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் அடுத்த ஷெட்யூல் ஹைதராபாத்தில் நாளை (3-ம் தேதி) தொடங்குகிறது.

அங்குள்ள ராமோஜி ராவ் பிலிம்சிட்டியில் படத்துக்காக பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு விஜய், ராஷ்மிகா, ஷாம் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படுகின்றன.

SCROLL FOR NEXT