சினிமா

தங்கர் பச்சானின் `கருமேகங்கள் கலைகின்றன’ ஷூட்டிங் தொடக்கம்!

காமதேனு

தங்கர் பச்சான் இயக்கும், ’கருமேகங்கள் கலைகின்றன’ படத்தின் ஷூட்டிங் கும்பகோணத்தில் இன்று தொடங்கியது.

ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான தங்கர் பச்சான், தனது மகன் விஜித் பச்சானை நடித்துள்ள 'டக்கு முக்கு டிக்கு தாளம்' படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதைத் தொடர்ந்து 'கருமேகங்கள் கலைகின்றன' என்ற புதிய படத்தை இயக்க இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அவர் தெரிவித்திருந்தார்.

இந்தப் படத்தில் பாரதிராஜா, யோகிபாபு, கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். இவர்களை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார். வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார்.

வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் வீரசக்தி தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கும்பகோணத்தில் இன்று தொடங்கியது.

SCROLL FOR NEXT