சினிமா

ரிலீஸூக்கு முன்பே பெரும் தொகைக்கு ஓடிடி உரிமத்தைக் கைப்பற்றிய 'தளபதி 67'?

காமதேனு

நடிகர் விஜய்யின் 67-வது படம் வெளியீட்டிற்கு முன்பே பெரும் தொகைக்கு ஓடிடி உரிமத்தைக் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் விஜய் தற்போது ‘வாரிசு’ படத்தை முடித்து விட்டு அதன் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். வம்சி இயக்கி இருக்கும் இந்தப்படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தை முடித்து விட்டு நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜூடன் ‘மாஸ்டர்’ படத்தை அடுத்து இணைய இருக்கிறார். இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.

படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே, இந்தப் படத்திற்கு இருக்கும் அதிக எதிர்பார்ப்புகளை ஒட்டி பெரும் தொகைக்கு முன்னணி ஓடிடி தளம் ஒன்று இதன் உரிமத்தைக் கைப்பற்றி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட 160 கோடி ரூபாய்க்கு படத்தின் ஓடிடி உரிமம் பேசப்பட்டுள்ளது.

சமீப காலங்களில், படம் வெளியாவதற்கு முன்பே தமிழ் சினிமாவில் இவ்வளவு அதிக தொகைக்குப் பேசப்பட்ட படம் இதுதான் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ‘விக்ரம்’ பட வெற்றிக்குப் பிறகு விஜய்யுடன் இணைவதால் அதிக எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. மேலும், ‘தளபதி 67’ கதைக்களம் கேங்ஸ்டர் கதை என்றும், டிசம்பர் மாதம் பட அறிவிப்பு வெளியானதில் இருந்து அடுத்த எட்டு மாதங்களுக்கு வெவ்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடக்கும் எனவும் தெரிகிறது. நடிகை த்ரிஷா கதாநாயகியாகவும் மற்றும் சஞ்சய் தத், நிவின் பாலி, கெளதம் வாசுதேவ் மேனன் ஆகியோரிடம் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT