சினிமா

`டான்' படத்தில் சிவகார்த்திகேயனின் ரோல்: சீக்ரெட்டை வெளியிட்ட நடிகை பிரியங்கா

காமதேனு

சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் திரைப்படம் இன்னும் சில நாட்களில் வெளியாக இருக்கிறது. அதனால் படக்குழு தற்போது படத்தை புரமோஷன் செய்யும் பணிகளில் மும்முரமாக இருந்து வருகிறது. சிவகார்த்திகேயனுடன் இணைந்து பிரியங்கா அருள் மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

கல்லூரி வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மிகவும் இளமையான தோற்றத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகி வந்தது. தற்போது அதை உறுதி செய்யும் பொருட்டு ஒரு தகவலை படத்தின் ஹீரோயின் பிரியங்கா அருள் மோகன் தெரிவித்துள்ளார்.

அதாவது இந்த படத்தில் சிவகார்த்திகேயன் 17 வயது பையன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்றும் இதற்காக அவர் உடல் எடையை குறைத்து, மிகவும் சிறப்பாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி உள்ளதாகவும் இந்தப் படம் இளைஞர்களை கவரும் வகையில் இருக்கும் என்றும், நம் கல்லூரி கால வாழ்க்கையை நினைவுபடுத்தும் வகையில் கலகலப்பாக இருக்கும் என்றும் பிரியங்கா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT