நடிகர் அகிலன் திருமணம் 
சினிமா

‘எத்தனைப் பேரை சீட் பண்ணுன?’ பிரபல நடிகரின் திருமண புகைப்படத்திற்கு கடுப்புடன் கமெண்ட் போட்ட விஜய் டிவி சீரியல் நடிகை!

அபர்ணா

விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் அறிமுகமானவர் அகிலன். அந்த தொடரில் பாரதிக்கு தம்பியாக அகிலன் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து பல சீரியல்களிலும், திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகர் அகிலன்

இந்நிலையில், நடிகர் அகிலன் தனது நீண்ட நாள் காதலியான அட்சயாவை திருமணம் செய்துள்ளார். அது தொடர்பான புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதற்கு, சின்னத்திரை நடிகர், நடிகைகள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகை கண்மணி

ஆனால், பாரதி கண்ணம்மா சீரியலில் அகிலனுக்கு ஜோடியாக நடித்த கண்மணி, நடிகர் அகிலன் வௌியிட்ட திருமண புகைப்படத்தில் காட்டமாக கமெண்ட் செய்துள்ளார். அதில், எத்தனை பேரை சீட் பண்ணுன? அதையும் மென்சன் பண்ண வேண்டியது தானே? கொஞ்சம் கூட வெட்கமே இல்லை என்று பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT