சினிமா

பிரபல பாலிவுட் ஹீரோ ஜோடியாகிறார் சமந்தா?

காமதேனு

பிரபல பாலிவுட் ஹீரோ ஜோடியாக, சமந்தா நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

நடிகை சமந்தா, விஜய் தேவரகொண்டாவுடன் ’குஷி ’படத்தில் நடித்துவருகிறார். ஷிவா நிர்வாணா இயக்குகிறார். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாள மொழிகளில் உருவாகும் இந்தப் படத்துக்கு ஜி முரளி ஒளிப்பதிவு செய்கிறார்.

இதற்கிடையே புராணக் கதையைக் கொண்ட ‘சாகுந்தலம்’ எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். குணசேகர் இயக்கியுள்ள இந்தப் படம் பான் இந்தியா படமாக உருவாகிறது. இந்தப் படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் இப்போது நடந்து வருகின்றன. இதற்கிடையே ஹரி - ஹரீஷ் இயக்கும் ’யசோதா’ என்ற த்ரில்லர் படத்திலும் சமந்தா நடித்து வருகிறார். அத்துடன் நடிகை டாப்ஸி தயாரிக்கும் படம் உட்பட சில படங்களில் நடிக்க இருக்கிறார்.

ரன்வீர் சிங்குடன் சமந்தா

இந்நிலையில் அவர் இந்தி படம் ஒன்றில் ரன்வீர் சிங் ஜோடியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ரன்வீர் சிங்குடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகை சமந்தா, வெள்ளை சட்டையில் தனது பெயர் பொறித்த பேட்ஜை அணிந்துள்ளார்.

இந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது. இருவரும் அடுத்தப் படத்தில் இணையப் போவதாக பாலிவுட்டில் பரபரப்பாக செய்தி வெளியாகி வருகிறது.

SCROLL FOR NEXT