சினிமா

பிரபல இந்தி ஹீரோ ஜோடியாகிறார் சமந்தா

காமதேனு

நடிகை சமந்தா பிரபல பாலிவுட் ஹீரோ அயுஷ்மன் குரானா ஜோடியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

நடிகை சமந்தா, ’ஃபேமிலிமேன் 2’ வெப் தொடர் மூலம் இந்தியிலும் பிரபலமானார். ’புஷ்பா’ படத்தில் அவர் ஆடிய பாடலும் இந்தி ரசிகர்களிடையே அவருக்குப் புகழைப் பெற்று தந்துள்ளது. இதையடுத்து அவர் இந்தி படங்களில் நடிக்க இருக்கிறார். பிரபல பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் தயாரிப்பில் அக்‌ஷய்குமார் ஜோடியாக அவர் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்தப் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், பிரபல இந்தி நடிகர் அயுஷ்மன் குரானாவுடன் அவர் ஹாரார் காமெடி படத்தில் நடிக்க இருக்கிறார். தினேஷ் விஜன் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங், இந்த வருட இறுதியில் தொடங்க இருக்கிறது. அடுத்த வருடம் படம் வெளியாக இருக்கிறது.

நடிகை சமந்தா இப்போது, சாகுந்தலம், யசோதா படங்களில் நடித்து முடித்துள்ளார். ’குஷி’ படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்து வருகிறார். அடுத்து நடிகை டாப்ஸி தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்தி நடிகர் அயுஷ்மன் குரானா, விக்கி டோனர், பதாய் ஹோ, அந்தாதுன், ஆர்டிகிள் 15, ட்ரீம் கேர்ள் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

SCROLL FOR NEXT