பீஸ்ட்’ படத்தில் விஜய்
பீஸ்ட்’ படத்தில் விஜய் 
சினிமா

’பீஸ்ட்’ இந்தி ரீமேக் உரிமைக்குக் கடும் போட்டி!- பிரபல இயக்குநர் பேச்சுவார்த்தை

காமதேனு

’பீஸ்ட்’ படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பெற, பிரபல இந்தி தயாரிப்பாளரும் இயக்குநருமான சஜித் நதியத்வாலா, பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

விஜய் நடிக்கும் 65வது திரைப்படம், 'பீஸ்ட்'. நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார். இயக்குநர் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்றும் யோகிபாபு, ஷைன் டோம் சாகோ, ஜான் விஜய், விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

சஜித் நதியத்வாலா

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக்‌ஷன், த்ரில்லர் படமான, இதன் ரீமேக் உரிமையை வாங்க இந்தி பட உலகில் கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் பிரபல இந்தி தயாரிப்பாளரும் இயக்குநருமான சஜித் நதியத்வாலா, ரிலீஸுக்கு முன்பே ‘பீஸ்ட்’ படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பெற பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

வழக்கமாக தென்னிந்திய படங்களின் ரீமேக் உரிமையை வாங்கும் சஜித் நதியத்வாலா, கதையை மட்டும் வைத்துக்கொண்டு திரைக்கதையை முழுவதுமாக மாற்றி எடுப்பது வழக்கம். சமீபத்தில் ’ஜிகிர்தண்டா’ படத்தை ’பச்சன் பாண்டே’ என்ற பெயரில் இந்தியில் தயாரித்திருந்தார்.

SCROLL FOR NEXT