சினிமா

கமல் கொடுத்த பிறந்த நாள் பரிசு: சிவகார்த்திகேயன் ஜோடியான பிரபல ஹீரோயின்!

காமதேனு

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் பிரபல ஹீரோயின் நாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார்.

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ’டான்’ படம் வரும் 13-ம் தேதி வெளியாகிறது. இதையடுத்து தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப்படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் நேரடி தெலுங்கு படத்தில் அறிமுகமாகிறார்.

ராஜ்குமார் பெரியசாமி, கமல்ஹாசன், சாய் பல்லவி

இதையடுத்து கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார். சோனி நிறுவனத்துடன் இணைந்து கமல் தயாரிக்கும் இந்தப் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.

இப்படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இந்நிலையில் இந்தப் படத்தின் நாயகியாக சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சாய் பல்லவியின் பிறந்த நாளை முன்னிட்டு கமல்ஹாசன் இதை அறிவித்துள்ளார்.

ராஜ்குமார் பெரியசாமி, கமல்ஹாசன், சாய் பல்லவி

மலையாளத்தில் வெளியான ’பிரேமம்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை சாய்பல்லவி, தற்போது தமிழ், தெலுங்கு , கன்னடம், மலையாளம் மொழிப் படங்களில் நடித்து வருகிறார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் அவருக்கு ரசிகர்கள் , திரையுலகினர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT