ஜூனியர் என்.டி.ஆர், ராஜமவுலி, ராம் சரண்
ஜூனியர் என்.டி.ஆர், ராஜமவுலி, ராம் சரண் 
சினிமா

`RRR2’ அசத்தல் அப்டேட் கொடுத்த இயக்குநர் ராஜமெளலி!

காமதேனு

‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்து இயக்குநர் ராஜமெளலி அப்டேட் கொடுத்துள்ளார்.

‘பாகுபலி2’ படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ராஜமெளலியின் அதிகம் எதிர்ப்பார்க்கப்பட்டப் படமான ‘ஆர்.ஆர்.ஆர்.’ இந்த வருடம் மார்ச் மாத இறுதியில் வெளியானது. ராம்சரண், அலியாபட், ஜூனியர் என்.டி.ஆர். உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி வெற்றிப் பெற்றது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிப் பெற்ற இந்தத் திரைப்படம் ஆஸ்கர் விருதுகளுக்கானத் தேர்வு பட்டியல் வரை சென்றது.

இந்தப் படத்தின் திரைக்கதையை இயக்குநர் ராஜமெளலியின் தந்தையான விஜயேந்திர பிரசாத் எழுதி இருந்தார். ஆந்திராவில் சுதந்திரப் போராட்ட வீரர்களான அல்லூரி சீதா ராமராஜு மற்றும் கொமரம் பீம் போன்றவர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கதை இது.

இந்த நிலையில், அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராஜமெளலியிடம் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்தான கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கான ஆரம்பக் கட்டப் பேச்சுவார்த்தையில் தானும் தன் தந்தையும் ஈடுபட்டிருப்பதாக ராஜமெளலி தெரிவித்திருப்பது ‘ஆர்.ஆர்.ஆர்.’ பட ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT