சினிமா

'ஆர்ஆர்ஆர்' திரைப்படத்திற்கு ஜப்பானில் ஏக வரவேற்பு: 3 நாட்களில் 3 கோடி வசூல்

காமதேனு

ஜப்பானில் திரையிடப்பட்டுள்ள 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் மூன்று நாட்களில் மூன்று கோடி ரூபாயை வசூல் செய்து சாதனைப் படைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்த படம் 'ஆர்ஆர்ஆர்'.. இப்படத்தை லைகா, பென் இந்தியா லிமிடெட், தமீன்ஸ் ஃபிலிம்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களை இணைந்து தயாரித்தன. கடந்த மார்ச் 25-ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிய இப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

உலகம் முழுவதும் இப்படம் 1000 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனைப் படைத்தது. இந்த நிலையில், அக்.21-ம் தேதி ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' வெளியானது. வெளியான அன்றே 1 கோடி ரூபாயை இப்படம் வசூல் செய்துள்ளது. ஜப்பான் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பால் கடந்த மூன்று நாட்களில் மட்டும் இப்படம் 3 கோடியைத் தாண்டி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

SCROLL FOR NEXT