ஆர்ஆர்ஆர்- ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன்
ஆர்ஆர்ஆர்- ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன் 
சினிமா

இந்தியில் தொடர்ந்து வசூல் குவிக்கும் ‘ஆர்ஆர்ஆர்’

காமதேனு

ராஜமவுலியின் ’ஆர்ஆர்ஆர்’ படம் இந்தியில் தொடர்ந்து அதிக வசூலை ஈட்டி வருகிறது.

ராஜமவுலி இயக்கத்தில் கடந்த மாதம் 25-ம் தேதி வெளியான படம், ’ஆர்ஆர்ஆர்’. ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண், அஜய்தேவ்கன், ஆலியா பட் உட்பட பலர் நடித்த இந்த பான் இந்தியா படம், முதல் நாளிலேயே ரூ.100 கோடி வசூலைக் கடந்தது. மூன்றே நாட்களில் ரூ.500 கோடி வசூலை கடந்து சாதனை படைத்தது. அடுத்த சாதனையாக பாகுபலி முதல் பாகத்தின் வசூலைக் கடந்தது.

அட்டாக் - ஜான் ஆபிரகாம்

இந்நிலையில், இந்தப் படம் வட இந்தியாவில் தொடர்ந்து வசூல் ஈட்டி வருகிறது. படம் வெளியாகி இரண்டு வாரம் ஆகிவிட்டாலும் இதன் வசூல் சரியவில்லை. வெள்ளிக்கிழமை, ஜான் ஆப்ரகாம் நடித்துள்ள ’அட்டாக்’ படம் வெளியாகி இருந்தாலும், அதைப் பின்னுக்குத் தள்ளி ’ஆர்ஆர்ஆர்’, வசூலில் தொடர்ந்து மிரட்டி வருகிறது.

ஜான் ஆபிரகாமின் ’அட்டாக்’ படம் முதல் நாளில் ரூ.3 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆர்ஆர்ஆர், இதே வசூலைத் தொடர்ந்தால், பாகுபலி 2 படத்தின் வசூலை இந்தப் படமும் நெருங்கும் என்று கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT