சினிமா

`உலகின் சிறந்த மனிதர் நீங்கள்தான்’: பிரபல நடிகரைப் புகழும் ராஷ்மிகா

காமதேனு

``உலகின் சிறந்த மனிதர் நீங்கள்'' என்று பிரபல நடிகரை, நடிகை ராஷ்மிகா மந்தனா பாராட்டியுள்ளார்

கர்நாடகாவைச் சேர்ந்தவர் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கில் இவருக்கு அதிக பட வாய்ப்புகள் கிடைத்ததால், ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். கார்த்தியின் ’சுல்தான்’ படம் மூலம் தமிழுக்கும் வந்த ராஷ்மிகா, இப்போது ’வாரிசு’ படத்தில் விஜய் ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்தியில், சித்தார்த் மல்ஹோத்ராவுடன் ’மிஷன் மஜ்னு’, அமிதாப் பச்சனுடன் ’குட்பை’, ரன்பிர் கபூருடன் ’அனிமல்’ படங்களிலும் நடித்து வருகிறார். விஷால் பால் இயக்கும் ’குட்பை’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து, கடைசி நாளில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை, தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகை ராஷ்மிகா, அமிதாப்பை பாராட்டியுள்ளார்

அதில், ’கோவிட்-டுக்கு மத்தியில் இந்தப் பயணத்தைத் தொடங்கி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் எங்கள் பயணத்தை யாராலும் தடுக்க முடியவில்லை. ’குட்பை’ வேடிக்கையான படம். கொஞ்சம் சிரிக்கத் தயாராகுங்கள். இந்தப் படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரும் எனக்கு எப்போதும் சூப்பர் ஸ்பெஷல்.

அமிதாப்பச்சன் சார், உங்களுடன் இந்தப் படத்தில் நடித்ததில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள்தான் உலகின் சிறந்த மனிதர். இதற்காக இயக்குநர் விகாஷ் பாலுக்கு நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT