ரஜினி & ரம்யாகிருஷ்ணன் `ஜெயிலர்’ படத்தில் ரஜினிக்கு மீண்டும் வில்லியாகும் ரம்யாகிருஷ்ணன்?
சினிமா

`ஜெயிலர்’ படத்தில் ரஜினிக்கு மீண்டும் வில்லியாகும் ரம்யாகிருஷ்ணன்?

காமதேனு

‘ஜெயிலர்’ படத்தில் நடிகர் ரஜினிக்கு ரம்யா கிருஷ்ணன் மீண்டும் வில்லியாக நடிக்க உள்ளார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்டப் பலர் நடித்து வரக்கூடியத் திரைப்படம் ‘ஜெயிலர்’. இதன் படப்பிடிப்பு தற்போது பெங்களூருவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தில் முக்கியமான ஆக்‌ஷன் காட்சி படமாக்கப்பட உள்ளது. பான் இந்தியா படமாக உருவாகி வரக்கூடிய இதற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த நிலையில், படத்தில் நடிக்கும் தமன்னா, ரம்யாகிருஷ்ணன், வசந்த் ரவி ஆகியோரது கதாபாத்திரம் குறித்தான தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் என்ற ஓய்வுபெற்ற ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ’படையப்பா’ படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்தது போலவே, இந்தப் படத்திலும் வலுவான வில்லி கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்து வருகிறார். வசந்த் ரவி, படத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக நடிக்கிறார். அதேபோல, தமன்னா மற்றும் சுனில் ஆகியோர் படத்தில் திரை நட்சத்திரங்களாகவே நடிக்கின்றனர். மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் ஆகியோரது கதாபாத்திரங்கள் குறித்தான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. விரைவில் இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

SCROLL FOR NEXT