சினிமா

பிரபல ஹீரோவுடன் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் ராம் சரண்: யார் படம் தெரியுமா?

காமதேனு

பிரபல ஹீரோவின் பான் இந்தியா படத்தில் ராம் சரண் கெஸ்ட் ரோலில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

பிரபல இந்தி நடிகர் சல்மான் கான், இப்போது ‘கபி ஈத் கபி தீவாளி’ என்ற படத்தை தயாரித்து நடித்து வருகிறார். இதில் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ், பூஜா ஹெக்டே, ஜெஸ்சி கில் உட்பட பலர் நடிக்கின்றனர். தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். படத்தை பர்ஹாத் சம்ஜி இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.

பான் இந்தியா முறையில், இந்தி, தெலுங்கு, தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தில், ராம் சரண் கெஸ்ட் ரோலில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒரு பாடல் காட்சியில் சல்மான் கானுடன் ராம் சரண் ஆட இருப்பதாகவும், சல்மான் கான் கேட்டதும் அவர் உடனே ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே இந்தப் படத்தின் தலைப்பை ‘பைஜான்’ என மாற்ற உள்ளதாக இந்தி சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

SCROLL FOR NEXT