சினிமா

‘ராக்கி’ திரைப்படம் பார்த்துவிட்டு பாரதிராஜாவிற்குப் பொன்னாடை அணிவித்த ரஜினி

காமதேனு

விக்னேஷ் சிவன் - நயந்தாராவின் ரௌடி பிக்ச்சர்ஸ் நிறுவனத் தயாரிப்பில் வசந்த் ரவி மற்றும் பாரதிராஜா நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகிய ‘ராக்கி’ திரைப்படம் நேற்று (டிச.,23) திரையரங்கங்களில் வெளியானது. இத்திரைப்படத்தின் கதையும், உருவாக்கப்பட்டுள்ள விதத்திற்கும் நல்ல விமர்சனங்களைப் பெற்றுவருகிறது

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ‘ராக்கி’ திரைப்படத்தை பிரத்தியேக காட்சியாகப் பார்த்து ரசித்துள்ளார். குறிப்பாக ‘ராக்கி’ திரைப்படத்தில் பாரதிராஜாவின் நடிப்பைப் பார்த்துப் படக்குழுவினர்களிடம் பாராட்டிப் பேசியுள்ளார்.

மேலும், இயக்குநர் இமயம் பாரதிராஜாவையும் ராக்கி திரைப்பட நாயகன் வசந்த் ரவியையும் தனது வீட்டிற்கு வரவழைத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தி தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார். இச்சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

SCROLL FOR NEXT