வெற்றிமாறன் - சூரி - ரஜினிகாந்த்
வெற்றிமாறன் - சூரி - ரஜினிகாந்த் 
சினிமா

‘‘விடுதலை’ அடுத்த பாகத்துக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்’ -ரஜினி புகழாரம்

காமதேனு

விடுதலை திரைப்படத்தை சிலாகித்து நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.

2 பாகங்களாக தயாரான விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் அண்மையில் வெளியானது. வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த திரைப்படம் விமர்சன ரீதியிலும், வசூல் வகையிலும் வரவேற்பு பெற்றுள்ளது. திரை நட்சத்திரங்கள் பலரும் விடுதலை முதல் பாகத்தை, திரையரங்கில் தரிசித்து பாராட்டு மழை பொழிந்து வருவதன் வரிசையில், தற்போது நடிகர் ரஜினிகாந்தும் சேர்ந்திருக்கிறார்.

’விடுதலை.. இதுவரை தமிழ்த் திரையுலகம் பார்த்திராத கதைக்களம். இது ஒரு திரைக்காவியம்! சூரியின் நடிப்பு - பிரமிப்பு. இளையராஜா - இசையில் என்றும் ராஜா. வெற்றிமாறன் - தமிழ்த் திரையுலகின் பெருமை. தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்துகள். இரண்டாவது பாகத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்’ என்று தெரிவித்திருக்கிறார் ரஜினி காந்த். இந்த பாராட்டினை தனது சமூக ஊடக பக்கத்தில் அவர் பகிர்ந்திருக்கிறார்.

SCROLL FOR NEXT