சினிமா

கம்பீரமாக பறக்கிறது தேசியக்கொடி: ட்விட்டரில் முகப்பு படத்தை மாற்றினார் ரஜினி!

காமதேனு

தனது ட்விட்டர் பக்கத்தின் முகப்பு படத்தை மாற்றியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்த நிலையில், ரஜினியின் ட்விட்டர் பக்க முகப்பில் கம்பீரமாக பறக்கும் தேசியக்கொடி படத்தை வைத்துள்ளார்.

75-வது சுந்திர தினத்தையொட்டி இந்தியர்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதை ஏற்று, கேரள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், சுரேஷ்கோபி, இசையமைப்பாளர் கீரவாணி உள்ளிட்ட பலர் தங்களது முகப்பு படத்திற்கு பதிலாக தேசியக்கொடியை இடம்பெற வைத்துள்ளனர்.

பாலிவுட்டில் நடிகர்கள் அக் ஷய்குமார், அஜய் தேவ்கன், ஷெர்லின் சோப்ரா உள்ளிட்டோர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் முகப்பு படத்தை மாற்றியுள்ளனர். தமிழ் திரையுலகில் இயக்குநர் செல்வராகவன், நடிகை இந்துஜா, தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் உள்ளிட்ட சிலர் மட்டுமே முகப்பு படத்தை மாற்றியுள்ளனர். பெரிய நடிகர்கள், நடிகையர் யாரும் அதை கண்டுகொள்ளவில்லை என்று விமர்சனம் எழுந்தது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டரில் தனது முகப்பு படத்திற்கு பதிலாக தேசியக்கொடியை வைத்துள்ளார்.

SCROLL FOR NEXT