ராய் லட்சுமி
ராய் லட்சுமி 
சினிமா

குத்துப்பாடலில் மீண்டும் ராய் லட்சுமி

காமதேனு

நடிகை ராய் லட்சுமி மீண்டும் குத்துப்பாடலுக்கு ஆடியுள்ளார்.

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன், ஹீரோவாக நடிக்கும் ’தி லெஜண்ட்’ படத்தை ஜேடி - ஜெர்ரி இயக்கி வருகின்றனர். இந்தப் படத்தின் மூலம் ஹீரோவாகவும், தயாரிப்பாளராகவும் சரவணன் அறிமுகமாகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்தப் படத்தில், ஊர்வசி ரவுதலா, பிரபு, விஜயகுமார், நாசர், தம்பி ராமையா உள்பட பலர் நடித்துள்ளனர்.

நடிகர் விவேக் நடித்துள்ள கடைசி படம் இது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இந்நிலையில், இந்தப் படத்தில் இடம்பெறும் குத்துப்பாடலுக்கு நடிகை ராய் லட்சுமி ஆடியுள்ளார். இந்தப் பாடல் காட்சிப் படப்பிடிப்பு சென்னையில் சமீபத்தில் நடந்துள்ளது.

ராய் லட்சுமி

‘நாட்டுப்புற பாடல் ஸ்டைலில் உருவாக்கப்பட்டுள்ள குத்துப்பாடலில் ராய் லட்சுமி ஆடியுள்ளார். பாடலுக்கான நடனத்தை ராஜூ சுந்தரம் அமைத்தார். ``பாடலும் நடனமும் ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பைப் பெறும்'' என்று படக்குழு தெரிவித்துள்ளது.

நடிகை ராய் லட்சுமி, ’மொட்ட சிவா கெட்ட சிவா’ உட்பட சில படங்களில் ஏற்கெனவே ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். இப்போது மீண்டும் குத்துப் பாடலுக்கு ஆடியிருக்கிறார்.

SCROLL FOR NEXT