சினிமா

`மக்களை சந்திக்க துணிவு இல்லாத அமைச்சர்'- மலம் கலந்த விவகாரத்தில் கொந்தளிக்கும் இயக்குநர் பா.ரஞ்சித்

காமதேனு

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் பகுதியில் உள்ள குடிநீர் மனித மலம் கலக்கப்பட்ட விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இயக்குநர் பா.ரஞ்சித், பாதிக்கப்பட்ட மக்களையே குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டும் என காவல் துறை மிரட்டுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இதுத் தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தொடரூம் சமூக அநீதி! புதுக்கோட்டை வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டறிய முயற்சிக்காமல், பாதிக்கப்பட்ட மக்களையே குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு விசாரணை என்ற பெயரில் மிரட்டி வரும் தமிழக காவல் துறைக்கு கடும் கண்டனங்கள்!!

வன்கொடுமைகள் எதிர்க்கொண்ட மக்களை சந்திக்க துணிவில்லாத ஆதி திராவிட நலத்துறை அமைச்சருக்கும், பட்டியலின மக்களுக்காக எந்த நடவடிக்கைகளிலும் செயல்படாத கழகங்களின் தனித் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வன்மையான கண்டனங்கள்'' என குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT