சினிமா

வெங்கட் பிரபு படத்தில் பூஜா ஹெக்டே

காமதேனு

தமிழ், தெலுங்கில்வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா. தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் நாக சைதன்யா, தமிழில், ’விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். இந்தப் படத்தின் தெலுங்கு பதிப்பில் நாயகனாக நடித்திருந்தார்.

சமந்தாவைக் காதலித்து திருமணம் செய்துகொண்ட நாக சைதன்யா, கடந்த வருடம் அவரைப் பிரிந்தார். இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நேரடி தமிழ்ப் படத்தில் நாக சைதன்யா நடிக்க இருக்கிறார். தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார்.

லிங்குசாமியின் ‘வாரியர்’ படத்தைத் தயாரிக்கும் ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம், இதைத் தயாரிக்க இருக்கிறது. இதில் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க இருக்கிறார். தற்போது விக்ரம் குமார் இயக்கும் வெப் தொடரில் நடித்துவருகிறார், நாக சைதன்யா. அது முடிந்ததும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

SCROLL FOR NEXT