சினிமா

திடீரென சம்பளத்தை உயர்த்திய பூஜா ஹெக்டே: ஆச்சரியத்தில் ஹீரோயின்கள்!

காமதேனு

பான் இந்தியா படத்துக்காக நடிகை பூஜா ஹெக்டே வாங்கிய சம்பளம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

நடிகர் விஜய் தேவரகொண்டா, ’லைகர்’ என்ற பான் இந்தியா படத்தில் நடித்து முடித்துள்ளார். இதை புரி ஜெகநாத் இயக்குகிறார். இந்தி நடிகை அனன்யா பாண்டே நாயகி. மைக் டைசன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

தெலுங்கு, இந்தியில் உருவாகியுள்ள இந்தப் படம், தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், புரி ஜெகநாத்தும், விஜய் தேவரகொண்டாவும் மீண்டும் புதிய படம் ஒன்றில் இணைந்துள்ளனர். பான் இந்தியா முறையில் உருவாகும் இந்தப் படத்துக்கு ’ஜனகனமண’ என்று டைட்டில் வைக்க முடிவு செய்திருந்தனர். மலையாளத்தில் இதே தலைப்பில் படம் வெளியானதால், தலைப்பை ஜேஜிஎம் (JGM) என்று வைத்துள்ளனர். இதை நடிகை சார்மி, இயக்குநர் வம்சி பைடிபள்ளி, புரி ஜெகநாத் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்தப் படத்தில் ஹீரோயினாக, பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகி உள்ளார். இதில் பூஜாவுக்கு ஆக்‌ஷன் காட்சிகளும் இருக்கின்றன. இந்தப் படத்துக்காக அவருக்குப் பேசப்பட்டுள்ள சம்பளம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. முந்தையை படங்களுக்கு இரண்டு கோடி வரை வாங்கிய பூஜா, இந்தப் படத்துக்கு ரூ.5 கோடி சம்பளமாக வாங்கி இருக்கிறார் என்கிறார்கள். இதில் ரூ.4 கோடி அவருக்கும் ஒரு கோடி அவர் உதவியாளர்கள் மற்றும் அவர் டீமுக்குமான சம்பளமாம்.

பூஜாவுக்குப் பேசப்பட்டுள்ள இந்தச் சம்பளம் மற்ற ஹீரோயின்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT