சினிமா

விஜய் நடிக்கும் அடுத்தப் படத்துக்கு பூஜை: நாயகி ராஷ்மிகா மந்தனா

காமதேனு

விஜய் நடிக்கும் பெயரிடப்படாத 'தளபதி 66' படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இந்த படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார்.

விஜய் நடித்துள்ள `பீஸ்ட் திரைப்படம் வரும் 13-ம் தேதி வெளியாகும் நிலையில், இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் புதிய படத்தில் நடிகர் விஜய் நடிக்கவுள்ளார். 'தளபதி 66' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கவுள்ளார்.

இந்நிலையில் 'தளபதி 66' படத்தின் கதாநாயகி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா 'தளபதி 66' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக அப்படத்தின் இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT