சினிமா

`மீரா மிதுனை நாயகி ஆக்கியதுதான் நான் செய்த பெரிய தவறு'‍ `பேய காணோம்’ பட இயக்குநர் குமுறல்

காமதேனு

படப்பிடிப்புக்கு வந்த முதல் நாளிலேயே, நடிகை மீரா மிதுன் பிரச்சினை செய்தார் என்று ’பேய காணோம்’ இயக்குநர் புகார் கூறினார்.

குளோபல் என்டர்டெயின்மென்ட் சார்பில் தேனி பாரத் ஆர். சுருளிவேல் தயாரித்துள்ள படம், ’பேய காணோம்’. செல்வ அன்பரசன் இயக்கியுள்ள இந்த காமெடி படத்தில், மீரா மிதுன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இயக்குநர் தருண் கோபி, கௌசிக், சந்தியா ராமச்சந்திரன், கோதண்டம், முல்லை, ஜாக்குவார் தங்கம் உட்பட பலர் நடித்துள்ளனர். மிஸ்டர் கோளாறு இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு, ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

தயாரிப்பாளர் சுருளிவேல் பேசும்போது, ‘’ இயக்குநர், இந்தப் படத்திற்கு நாயகியாக மீரா மிதுனை தேர்வு செய்யலாம் என்றார். வேண்டாம் என்றேன். அவர்தான் பொருத்தமாக இருப்பார் என்று இயக்குநர் சொன்னார். சரி என்றேன். ஆனால் அவர் வந்த போதே இயக்குநர் மீது குற்றசாட்டுக் கூறினார். ஷூட்டிங்கில் பாதியில் கிளம்பி போய் விடுவார். திடீரென டில்லியில் இருக்கிறேன், விமான டிக்கெட் போட்டால் வருவேன் என்பார். நிறைய தொல்லைகள் தந்தார். பாதி படம் எடுக்கப்பட்டு விட்டதால் அவரை மாற்ற முடியவில்லை. அவரை போன்ற ஒருவரை வைத்து கொண்டு இப்படத்தின் படப்பிடிப்பை முடித்தது பெரிய விஷயம்’’ என்றார்.

இயக்குநர் செல்வ அன்பரசன் பேசும்போது, ’’நான் செய்த பெரிய தவறும் பெரிய சரியும் மீரா மிதுனை நாயகி ஆக்கியதுதான். பேயாக நடிப்பதற்குப் பொருத்தமாக இருப்பார் என நினைத்தேன். ஆனால் அவருக்கும் எனக்கும் முதல் நாளே சண்டை. பிறகு ஒழுங்காக ஷூட்டிங் வந்தார். பிறகு ஒரு வழக்கில் சிறைக்குச் சென்றுவிட்டார். வெளியே வந்த பிறகு எப்படியோ படத்தை எடுத்து முடித்து விட்டோம். இந்தப் படம் அனைவரையும் சிரிக்க வைக்கும்’’ என்றார்.

SCROLL FOR NEXT