சினிமா

’ஆர்ஆர்ஆர்’, ’கே.ஜி.எஃப் 2’ மாஸ் வெற்றி: ஸ்கிரிப்ட்டை திருத்தும் இயக்குநர்கள்!

காமதேனு

'ஆர்ஆர்ஆர்', 'கே.ஜி.எஃப் 2' படங்கள் சூப்பர் ஹிட் ஆகி இருப்பதால், தங்கள் ஸ்கிரிப்ட்டை திருத்தும் பணியில் சில ’பான் இந்தியா’ இயக்குநர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்.டி.ஆர், ராம்சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன் உட்பட பலர் நடித்த படம், ‘ஆர்ஆர்ஆர்’. தெலுங்கில் உருவான இந்தப் படம் இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் உட்பட சில மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது. தெலுங்கைப் போல மற்ற மொழிகளிலும் இந்தப் படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. எதிர்பார்த்த வசூலையும் தாண்டியிருக்கிறது.

ஆர் ஆர் ஆர் படத்தில்...

இதே போல, ‘கே.ஜி.எஃப் 2’ படமும் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இந்தப் படத்தில் யாஷ், இந்தி நடிகர் சஞ்சய் தத், ரவீணா டாண்டன், ஸ்ரீனிதி ஷெட்டி உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் இந்திப் பதிப்பும் வசூல் சாதனை செய்து வருகிறது.

கப்ஜா படத்தில் உபேந்திரா

இந்த இரண்டு படங்களும் இந்தி உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் வெற்றிகளை குவித்துள்ளதால், பான் இந்தியா முறையில் படம் எடுக்கும் இயக்குநர்கள், தங்கள் ஸ்கிரிப்ட்டை மெருகூட்ட, அதைத் திருத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பிரபல கன்னட இயக்குநர் ஆர்.சந்துரு, ’கப்ஜா’ என்ற படத்தை இயக்கி வருகிறார். ஏழு மொழிகளில் உருவாகும் இதில் உபேந்திரா, சு்தீப், ஸ்ரேயா, நவாப் ஷா, டேனிஷ் அக்தர் ஷைஃபி உட்பட பலர் நடிக்கின்றனர்.

இயக்குநர் சுகுமாருடன் அல்லு அர்ஜுன்

படம் பற்றி இயக்குநர் சந்துரு கூறும்போது, “ஆர்ஆர்ஆர், கே.ஜி.எஃப் 2 படங்களுக்குக் கிடைத்துள்ள வரவேற்பு, ஓர் இயக்குநராக எனக்கு அழுத்தத்தைத் கொடுத்துள்ளது. படத்தின் மேக்கிங்கிலும் பட்ஜெட்டிலும் எந்த சமரசத்தையும் செய்ய வில்லை. ஆனால் ஸ்கிரிப்ட்டை மீண்டும் ஒரு முறை பார்க்கிறோம். சண்டைக் காட்சிகளையும் சில காட்சிகளையும் புதிதாகச் சேர்க்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

இதே போல, அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா’ படத்தின் அடுத்தப் பாகத்துக்கான ஷூட்டிங் இந்த மாதம் தொடங்க இருந்தது. ஸ்கிரிப்ட் திருப்தியாக வராத நிலையில், ‘ஆர்ஆர்ஆர்’, கே.ஜி.எஃப் 2’ படங்களின் பிரம்மாண்டமான வெற்றி காரணமாக, அவற்றைவிட பிரம்மாண்டமாகப் படத்தை உருவாக்க வேண்டும் என்று இயக்குநர் சுகுமார் முடிவு செய்துள்ளார். அதனால், அந்தப் படத்தின் ஷூட்டிங்கை அவசரம் அவசரமாகத் தொடங்கும் முடிவு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT