சினிமா

‘அந்த வரிகளை நீக்கிவிட்டு மன்னிப்பு கேளுங்கள்’ - கமலுக்கு நோட்டீஸ்

காமதேனு

'விக்ரம்' படத்தின் ’பத்தல பத்தல' பாடலுக்கு எதிராக கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனத்துக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் ‘விக்ரம்’. இதில் விஜய் சேதுபதி, பஹத் பாசில் உட்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார். கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படம் அடுத்த மாதம் 3-ம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தில் அனிருத் இசையில் கமல்ஹாசன் எழுதி பாடியுள்ள ‘பத்தல, பத்தல’ என்ற பாடல் கடந்த 11-ம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தப் பாடலின் வரிகள் மத்திய அரசை விமர்சிப்பது போல் இருப்பதாகக் கூறி, சிலர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வரிகளை நீக்கக் கோரி, கொருக்குப்பேட்டையை சேர்ந்த ஆர்.டி.ஐ. செல்வம் என்பவர் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்துக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த வரிகளை இரண்டு நாட்களில் நீக்கிவிட்டு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவில்லை என்றால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT