ஹே சினாமிகா- அதிதி ராவ், துல்கர் சல்மான்
ஹே சினாமிகா- அதிதி ராவ், துல்கர் சல்மான் 
சினிமா

’ஹே சினாமிகா’: புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

காமதேனு

துல்கர் சல்மான் நடித்துள்ள ’ஹே சினாமிகா’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

பிரபல நடன இயக்குநர் பிருந்தா. தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களில் பணியாற்றிய இவர், இயக்குநராக அறிமுகமாகும் படம், ‘ஹே சினாமிகா’. இதில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்துள்ளார். காஜல் அகர்வால், அதிதி ராவ் ஹைதாரி உட்பட பலர் நடித்துள்ளனர். பிரீத்தா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார்.

துல்கர் சல்மான், அதிதி ராவ்

குளோபல் ஒன் ஸ்டூடியோஸுடன் இணைந்து ஜியோ ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படம், வரும் 25-ம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் ரிலீஸ் தேதியை மார்ச் 3-ம் தேதிக்கு படக்குழு மாற்றியுள்ளது.

வரும் 24-ம் தேதி அஜித்குமாரின் ’வலிமை’ படமும், மார்ச் 10-ம் தேதி சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ படமும் வெளிவர உள்ள நிலையில், மார்ச் 3-ம் தேதி ’ஹே சினாமிகா’ வெளியாக இருக்கிறது.

SCROLL FOR NEXT