’பாக்கியலட்சுமி’ சதீஷ்!
’பாக்கியலட்சுமி’ சதீஷ்! `பிரச்சினை தீர்ந்துவிட்டது; கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டது'- `பாக்கியலட்சுமி’ சதீஷ் குட்நியூஸ்
சினிமா

`பிரச்சினை தீர்ந்துவிட்டது; கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டது'- `பாக்கியலட்சுமி’ சதீஷ் குட்நியூஸ்

காமதேனு

’பாக்கியலட்சுமி’ சீரியலில் தொடர்ந்து நடிக்க இருப்பதாக நடிகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் சீரியல்களில் ‘பாக்கியலட்சுமி’யும் ஒன்று. இதில் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரக்கூடிய நடிகர் சதீஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனிப்பட்ட காரணங்களுக்காக சீரியலை விட்டு விலகுவதாக வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதனை அடுத்து அவரை சீரியலை விட்டு விலக வேண்டாம் என ரசிகர்கள் பலரும் கமென்ட்டில் தெரிவித்து இருந்தனர்.

இதனை அடுத்து தன் இஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பகிர்ந்து அவர் பேசியிருப்பதாவது, ‘கடந்த பத்து நாட்களுக்கு முன்பு உணர்ச்சிவசப்பட்டு தனிப்பட்ட காரணங்களுக்காக பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகுவதாக சொல்லி இருந்தேன். இப்போது அந்த பிரச்சினைகள் தீர்ந்துவிட்டது. என் கேள்விகளுக்கும் பதில் கிடைத்துவிட்டது. அதனால், இனி சந்தோஷமாக முழு மனதாக ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் தொடர்ந்து கோபியா நடிக்க இருக்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக நீங்கள் என் மீது காட்டிய அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி’ எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT