இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஆஸ்கர் விருதுக்குத் தவறான படங்கள் அனுப்பப்படுகின்றன: மனம் திறந்த ஏ.ஆர்.ரஹ்மான்
சினிமா

ஆஸ்கர் விருதுக்குத் தவறான படங்கள் அனுப்பப்படுகின்றன: மனம் திறந்த ஏ.ஆர்.ரஹ்மான்

காமதேனு

ஆஸ்கர் விருதுக்குத் தவறானப் படங்கள் அனுப்பப்படுவதாக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்கர் விருதுகள் நிகழ்ச்சியில் ‘ஆர்.ஆர்.ஆர் ’ திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடலும் ‘தி எலிபெண்ட் விஷ்பர்ஸ்’ ஆவணப்படமும் ஆஸ்கர் விருதுகளை வென்றன.

கடந்த ஜனவரி மாதம் வயலின் இசை ஜாம்பவான் எல்.சுப்ரமணியத்துடனான பேட்டியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், " ஆஸ்கர் விருதுக்குத் தவறான படங்கள் அனுப்பி வைக்கப்படுகிறது" என்று கூறியிருந்தார். அந்த பேட்டி தற்போது இணையங்களில் வைரலாகி வருகிறது.

அந்த பேட்டியில் ஏ.ஆர்.ரஹ்மான் கூறுகையில், ‘திரையுலகம் பல புதிய மாற்றங்களை சந்தித்திக் கொண்டிருந்தபோதுதான் நான் உள்ளே வந்தேன். அப்போது எனக்கு நிறைய கற்றுக் கொள்ள நேரம் இருந்தது. ஹாலிவுட் இசையை நாம் கேட்கும்போது நம் இசையை அவர்களை ஏன் கேட்க வைக்க முடியவில்லை என்று யோசித்தேன். அதே சமயம், இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு அனுப்பி வைக்கப்படும் பல படங்கள் விருதுகளைப் பெற முடிவதில்லை. தவறான படங்களைத் தேர்ந்தெடுத்து நாம் அனுப்புவதும் அதற்கு ஒரு முக்கியக் காரணம்’ என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் ஆஸ்கர் விருதை வென்ற ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம் இந்திய அரசு சார்பில் ஆஸ்கருக்கு அனுப்பி வைக்கத் தேர்வாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT