நடிகை மஞ்சு வாரியர்
நடிகை மஞ்சு வாரியர் 
சினிமா

7 மொழிகளில் உருவாகும் மஞ்சு வாரியரின் ‘ஆயிஷா’

காமதேனு

நடிகை மஞ்சு வாரியர் நடிக்கும் ’ஆயிஷா’ திரைப்படம், தமிழ், மலையாளம் உட்பட 7 மொழிகளில் உருவாகிறது.

பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர், நடிகர் திலீப்பைக் காதலித்து திருமணம் செய்துகொண்ட பின், சினிமாவில் நடிக்காமல் குடும்பத்தைக் கவனித்து வந்தார். இந்நிலையில் கருத்துவேறுபாடு காரணமாக, 2015-ம் ஆண்டு திலீப்பை விவாகரத்து செய்த அவர், மீண்டும் திரையுலகப் பயணத்தைத் தொடங்கினார்.

அவருடைய ரீ என்ட்ரி படமான ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ பலத்த வரவேற்பைப் பெற்றது. பிறகு தொடர்ந்து நடித்து வரும் அவர், மலையாள சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டாராக இருக்கிறார். வெற்றிமாறன், தனுஷ் கூட்டணியின் ’அசுரன்’ படம் மூலம் தமிழுக்கும் வந்த மஞ்சு வாரியர், அடுத்தும் சில தமிழ்ப் படங்களில் நடிக்க இருக்கிறார்.

இதற்கிடையே, அவர் ’ஆயிஷா’ என்ற இந்தோ - அரபு திரைப்படத்தில் நடிக்கிறார். இதற்கான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. ஆமிர் பல்லிக்கல் இயக்கும் இந்தப் படத்தை, இயக்குநர் சக்காரியா முகமது தயாரிக்கிறார். இவர், பாராட்டுகளைப் பெற்ற ‘சூடானி ஃபிரம் நைஜீரியா’, ’ஹலால் லவ் ஸ்டோரி’ படங்களை இயக்கியவர். ஜெயச்சந்திரன் இசை அமைக்கிறார். விஷ்ணு சர்மா ஒளிப்பதிவு செய்கிறார்.

ஆயிஷா படப்பிடிப்பில்..

இதன் படப்பிடிப்பு ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி இருக்கிறது. இதை நடிகை மஞ்சு வாரியர் தனது சமூக வலைதளப் பக்கம் மூலம் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகளில் இதன் முழு படப்பிடிப்புப் நடக்க இருக்கிறது. இந்தப் படம், மலையாளம், ஆங்கிலம், அரபு, தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 7 மொழிகளில் உருவாவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT