சினிமா

இயக்குநரை அடுத்து அஜித் பட ஹீரோயினும் விலகல்!

காமதேனு

பிரபல ஹீரோ படத்தில் இருந்து அஜீத் பட ஹீரோயின் திடீரென விலகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பிருத்விராஜ் நடிப்பில் உருவாகும் மலையாள படம் ’காப்பா’. கேங்ஸ்டர் கதையைக் கொண்ட இந்தப் படத்தில் ஆசிப் அலி, அன்னா பென் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்து கோபன் எழுதிய இந்த படத்தை, முன்னறியிப்பு (Munnariyippu) ஆணும், பெண்ணும் ஆகிய படங்களை இயக்கிய வேணு இயக்குவதாக இருந்தது. அவருக்கும் படக்குழுவுக்கும் படைப்பு ரீதியான கருத்துவேறுபாடு ஏற்பட்டதால், இயக்குநர் வேணு விலகினார்.

இதையடுத்து ஷாஜி கைலாஷ் இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த வாரம் திருவனந்தபுரத்தில் தொடங்கியது. இந்தப் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகை மஞ்சு வாரியர் நடிக்க இருந்தார். அவர் இப்போது இந்தப் படத்தில் இருந்து விலகியுள்ளார். கால்ஷீட் பிரச்னை காரணமாக, அவர் விலகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

நடிகை மஞ்சு வாரியர், ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT