லதா மங்கேஷ்கர்
லதா மங்கேஷ்கர் hindu கோப்பு படம்
சினிமா

“வளையோசை நின்றுவிட்டது” -மதுரை எம்பி சு.வெங்கடேசன் இரங்கல்

காமதேனு

“பாரதரத்னா பட்டம் பெற்ற கானக்குயில், மனதில் மோதும் உங்கள் குரலுக்கு எப்போதும் மறைவில்லை” என்று லதா மங்கேஷ்கர் மறைவுக்கு, மதுரை எம்பி சு.வெங்கடேசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அவர் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஒருமாதமாக சிகிச்சை பெற்று வந்த லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமானது. இதையடுத்து அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று லதா மங்கேஷ்கர் காலமானார். மும்பை சிவாஜி பூங்காவில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா கலைஞர்கள் உள்ளிட்டவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

லதா மங்கேஷ்கர் மறைவுக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “வளையோசை நின்றது… இந்திய இசையுலகின் மூத்தகுரல்… 13 வயதில் தொடங்கி 30,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர்… பாரதரத்னா பட்டம் பெற்ற கானக்குயில்… மனதில் மோதும் உங்கள் குரலுக்கு எப்போதும் மறைவில்லை… ஆழ்ந்த இரங்கல் லதா மங்கேஷ்வர் அவர்களே!” என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT