சினிமா

இந்திய வரலாற்றுப் படத்துக்கு குவைத், ஓமனில் திடீர் தடை

காமதேனு

இந்திய வரலாற்றுப் படத்துக்கு குவைத், ஓமன் நாடுகள் தடை விதித்துள்ளன.

அக்‌ஷய் குமார் நடித்துள்ள இந்தி படம், ’சாம்ராட் பிருத்விராஜ்’. மனுஷி சில்லார், சஞ்சய் தத், சோனு சூட் உட்பட பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தை சந்திரபிரகாஷ் திவேதி இயக்கியுள்ளார். மனுஷ் நந்தன் ஒளிப்பதிவுசெய்துள்ள இந்தப் படத்தின் பாடல்களுக்கு ஷங்கர் - எஹசான் -லாய் இசை அமைத்துள்ளனர். யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் நாளை (ஜூன் 3) வெளியாகிறது. இந்தி, தெலுங்கு, தமிழில் இந்தப் படம் வெளியாகிறது.

ஆப்கானிஸ்தான் மன்னன் முகமது கோரியிடம் இருந்து நாட்டைக் காக்க போராடிய மன்னர் பிருத்விராஜ் சவுகானின் வீரத்தைப் பறைசாற்றும் விதமாக இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படத்துக்கு குவைத் மற்றும் ஓமன் நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

’புகழ்பெற்ற இந்து சாம்ராட் பிருத்விராஜ் வாழ்க்கை மற்றும் தைரியத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு படம், குவைத் மற்றும் ஓமன் போன்ற நாடுகளில் தடைசெய்யப்பட்டிருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. படம் வெளிவரும் முன்பே இந்த நாடுகள் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகத் தெரிகிறது’ என்று படக்குழு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT