கீர்த்தி சனான்
கீர்த்தி சனான் 
சினிமா

விஜய்க்கு ஜோடியாக இந்தி நடிகை?

காமதேனு

வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக இந்தி நடிகை நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

‘பீஸ்ட்' படத்தை அடுத்து விஜய் நடிக்கும் படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்குகிறார். விஜய்யின் 66- வது படமான இதை தில் ராஜூ தயாரிக்கிறார். தெலுங்கு, தமிழ், இந்தி என பான் இந்தியத் திரைப்படமாகப் பிரம்மாண்ட பட்ஜெட்டில் இது உருவாகவுள்ளது. இந்தப் படத்திற்காக விஜய்க்கு ரூ.100 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கீர்த்தி சனான்

இதில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. அவர் நடிப்பது உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், இந்தப் படத்துக்காக பிரபல இந்தி நடிகை கீர்த்தி சனானிடம் படக்குழு பேசிவருவதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்குவதாகவும் முதல்கட்டமாக ஐதராபாத்தில் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT