கோவை குணா
கோவை குணா 
சினிமா

கோவை குணா திடீர் மரணம்!

காமதேனு

சின்னத்திரை நிகழ்ச்சிகள் வாயிலாக மக்கள் மத்தியில் பெரிதும் அறியப்பட்ட, கோவை குணா இன்று திடீரென மரணமடைந்தார். உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சையிலிருந்த நிலையில் அவரின் மரணம் நிகழ்ந்திருக்கிறது.

விஜய் டிவியின் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் வாயிலாக, சினிமாவில் நுழைந்து சாதித்தோர் ஏராளம். அவர்களில் பலரும், பல குரலில் பேசியே தங்களது இன்னிங்ஸை தொடங்கி இருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் முன்னோடி கோவை குணா.

கவுண்டமணி மற்றும் சிவாஜி குரல்களில் கூட்டத்தை கட்டிப்போடும் வித்தை தெரிந்தவர் கோவை குணா. கலக்கப்போவது யார் என்ற விஜய் டிவியின் நிகழ்ச்சியின் வாயிலாகவே இவர் அதிகம் பிரபலமாகி இருந்தார். அதன் முதல் டைட்டில் வின்னரும் கூட! டைமிங் சென்ஸ் உடைய வெகுசில நகைச்சுவையாளர்களில் இவரும் ஒருவர்.

சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் காரணமாக சிகிச்சை பெற்று வந்த கோவை குணா, கரோனா காலத்தில் மிகவும் சிரமப்பட்டார். அதிலிருந்து மீண்டு வந்தவர், இனி பழையபடி உலா வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கோவையில் இன்று அவரது மரணம் நிகழ்ந்திருக்கிறது.

கோவை குணா மறைவுக்கு சின்னத்திரை நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT