சினிமா

‘ஹரா’ படத்தில் மோகன் ஜோடியாகிறார் குஷ்பு

காமதேனு

நடிகர் மோகன் ரீ என்ட்ரியாகும் ’ஹரா’ படத்தில் அவர் ஜோடியாக குஷ்பு நடிக்கிறார்.

தமிழ் சினிமாவில் வெள்ளி விழா நாயகன் என்று புகழப்பெற்றவர் நடிகர் மோகன். தொடர்ந்து பல சூப்பர் ஹிட் பட்ங்களில் நடித்த மோகன், கடந்த 1999-ம் ஆண்டு ’அன்புள்ள காதலுக்கு’ என்ற படத்தை இயக்கி நடித்தார்.

பிறகு நடிக்காமல் இருந்த அவர், பத்தாண்டுகளுக்கு பிறகு, 2008-ல் வெளியான ‘சுட்ட பழம்’ படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறவில்லை. பிறகு ’அபயிதோ அம்மாயி’ என்ற தெலுங்கு படத்தில் நாயகிக்கு அப்பாவாக நடித்தார்.

குஷ்பு

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ’ஹரா’ என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார். இதை ‘தாதா 87’ படத்தை இயக்கிய விஜயஸ்ரீ இயக்குகிறார். இதை கோவை எஸ்.பி.மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்தப் படத்தில் மோகனின் ஜோடியாக குஷ்பு நடிக்கிறார். ”இருவரும் தெலுங்கு படம் ஒன்றில் சேர்ந்து நடித்துள்ளனர். தமிழில் சேர்ந்து நடிப்பது இதுதான் முதல்முறை . மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. குஷ்பு, மோகன் நடிக்கும் காட்சிகள் ஊட்டியில் நடக்க இருக்கின்ற்ன“ என்று இயக்குநர் விஜய் ஸ்ரீ கூறியிருக்கிறார்.

SCROLL FOR NEXT