கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் 
சினிமா

கீர்த்தி சுரேஷின் ’குட்லக் சகி’ ரிலீஸ் தேதி

காமதேனு

கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ’குட்லக் சகி’ படம் வரும் 28-ம் தேதி தியேட்டரில் நேரடியாக வெளியாகிறது.

நாகேஷ் கூக்குன்னூர் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம், 'குட்லக் சகி'. ஆதி, ஜெகபதி பாபு, ரமாபிரபா, ராகுல் ராமகிருஷ்ணா உட்பட பலர் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார். சுதிர் சந்திர பத்ரி தயாரித்துள்ள இந்தப் படம், தெலுங்கு, தமிழ், மலையாள மொழிகளில் வெளியாகிறது.

இந்தப் படத்தின் டீசருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்த நிலையில், கரோனா காரணமாக சிலமுறை இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாகவும் கூறப்பட்டது. அதை அப்போது தயாரிப்பாளர் மறுத்திருந்தார்.

’‘படத்தை நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்யப் போகிறோம் என்ற தகவலில் உண்மையில்லை. அப்படி இருந்தால் அதுகுறித்த தகவல்களைத் தெரிவிக்கிறோம்” என்று கூறியிருந்தனர்.

இந்நிலையில் இந்தப் படம், வரும் 28-ம் தேதி தியேட்டரில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT