சினிமா

சுதா கொங்கரா இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ்?

காமதேனு

சுதா கொங்கரா இயக்கும் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

'சூரரைப் போற்று' படத்தின் இந்தி ரீமேக்கை இயக்கி வருகிறார், சுதா கொங்கரா. இதில் அக்‌ஷய் குமார், ராதிகா மதன் ஜோடியாக நடிக்கின்றனர். இந்தப் படத்தை அடுத்து, கேஜிஎப் படங்களை தயாரித்த ஹோம்பலே நிறுவனம் தயாரிக்கும் படத்தை அவர் இயக்க இருக்கிறார். உண்மை சம்பவக் கதையை கொண்ட படத்தைத் தயாரிக்க இருப்பதாக ஹோம்பலே நிறுவனம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. சூர்யா நடிக்கும் படத்தையும் சுதா கொங்கரா இயக்க இருப்பதாகத் தெரிவித்து இருந்ததால், இதில் அவர் ஹீரோவாக நடிக்கலாம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதை ஒன்றை சுதா கொங்கரா இயக்க இருப்பதாகவும் அதில் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

நடிகை கீர்த்தி சுரேஷ், இப்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் ’மாமன்னன்’ படத்தில் நடிக்கிறார். தெலுங்கில் நானி ஜோடியாக ‘தசாரா’, சிரஞ்சீவியின் ‘போலா சங்கர்’ படங்களில் நடித்து வருகிறார்.

SCROLL FOR NEXT