நடிகர் கமல்ஹாசனுடன் கவின்
நடிகர் கமல்ஹாசனுடன் கவின் ‘இன்று கோயிலுக்கு சென்றேன்'- கமல்ஹாசனை சந்தித்தது குறித்து கவின் நெகிழ்ச்சி!
சினிமா

‘இன்று கோயிலுக்கு சென்றேன்'- கமல்ஹாசனை சந்தித்தது குறித்து கவின் நெகிழ்ச்சி!

காமதேனு

‘டாடா’ பட வெற்றிக்காக நடிகர் கமல்ஹாசன் கவின், இயக்குநர் கணேஷ் கே பாபு மற்றும் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கணேஷ் கே பாபு இயக்கத்தில் நடிகர் கவின், அபர்ணாதாஸ் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘டாடா’. நேற்று திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தற்போது படத்தின் வெற்றிக்காக நடிகர் கமல்ஹாசன் படக்குழுவை நேரில் அழைத்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார். கணேஷ் கே பாபு மற்றும் ‘டாடா’ படத்தில் வேலை பார்த்த பல தொழில்நுட்பக் கலைஞர்கள் முன்பு கமல்ஹாசனின் நிறுவனம் தயாரித்தப் பல படங்களிலும் வேலை பார்த்திருக்கிறார்கள்.

‘டாடா’ படக்குழு

மேலும், நேரம் கிடைக்கும்போது ‘டாடா’ படம் பார்க்க விரும்புவதாகவும் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார். கமலுடன் இருக்கும் புகைப்படத்தைப் தன் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள நடிகர் கவின், ‘இன்று கோயிலுக்கு சென்றேன்’ என மகிழ்ச்சியுடன் இந்தப் படத்தப் பகிர்ந்திருக்கிறார். இதற்காகவும், படத்தின் வெற்றிக்காகவும் ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை கவினுக்கும் ‘டாடா’ படக்குழுவினருக்கும் தெரிவித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT