கார்த்தி
கார்த்தி 
சினிமா

’சர்தார்’படத்தை அடுத்து ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி

காமதேனு

’சர்தார்’ படத்தை ராஜூ முருகன் இயக்கும் படத்தில் கார்த்தி நடிக்க இருக்கிறார்.

பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்கும் படம், ‘சர்தார்’. இதில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் நாயகிகளாக நடிக்கின்றனர். சிம்ரன், இந்தி நடிகர் சங்கி பாண்டே, முரளி சர்மா, இளவரசு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.

இந்தப் படத்தின், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி.வில்லியம்ஸுக்கு சமீபத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

ராஜூ முருகன்

அவர் இப்போது குணமடைந்ததால் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடக்கிறது. இந்தப் படம் ஏப்ரல் மாதத்துக்குள் முடிந்துவிடும் என்று தெரிகிறது.

இதற்குப் பிறகு நடிகர் கார்த்தி, ராஜூ முருகன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை ட்ரீம்வாரியர் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படம் பற்றிய அறிவிப்பு ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகும் என்று தெரிகிறது. மே மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி ஆகிய படங்களை அடுத்து ராஜூ முருகன், கார்த்தி நடிக்கும் படத்தை இயக்குகிறார்.

SCROLL FOR NEXT